விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1, ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகியது. அதன் முதலாவது கதைக்களம் அண்ணன்-தம்பிகளுக்கு இடையிலான பந்த பாசத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்தது.
இந்த சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகமும் வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் தந்தைக்கு மகன்களுக்கும் இடையிலான பாசம், கோபம், வைராக்கியம் ஆகியவற்றைக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.
முதலாவது சீசனுக்கு கிடைத்த வரவேற்பு போலவே, இதன் இரண்டாவது சீசனுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அதிலும் இந்த சீசனில் மருமகள்களாக களம் இறங்கியவர்கள் இந்த சீரியலை மேலும் சிறப்பாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2வில் வில்லி கேரக்டரில் தங்கமயிலுக்கு அம்மாவாக நடிப்பவர் நடிகை கௌதமி வேம்புநாதன். அவர் பாக்கியம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மாணிக்கம் என்ற கேரக்டரில் நடிப்பவர் ரவி.
தற்போது, அவர்கள் பிரபல சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி வைரல் ஆகி வருகிறது. அதில் ரவி, கௌதமி பற்றி பேசிய விடயங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.
அதன்படி அவர் கூறியதாவது, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷூட் எடுத்து ஒரு பத்து நிமிடம் டைம் கிடைத்தாலும் போதும், உடனே ஓடிச் சென்று போனை தட்டி, தன்னுடைய மகளுக்கு கௌதமி போன் பண்ணி விடுவார். அவர் பெங்களூருரில் இருக்கிறார். எப்படியும், ஒரு நாளைக்கு 20 தடவை என்றாலும் கால் செய்து பேசுவார் என தெரிவித்துள்ளார்.
Listen News!