• May 29 2026

பெத்தவங்கள விட்டுட்டு நிம்மதியா இருக்க முடியுமா? பொங்கியெழுந்த நடிகர் சிவகுமார்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் மூத்த நடிகரான சிவகுமார் பகிர்ந்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், பெற்றோர்களின் முக்கியத்துவம் குறித்து உணர்ச்சிகரமாக பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.


“வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு தான் சம்பாதித்தாலும், உங்கள் தாய் மற்றும் தந்தையை அநாதையாகக் கொண்டு போய் முதியோர் இல்லத்தில் விட்டால், அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது. நீங்கள் நிம்மதியாகச் இருக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களைப் பெற்று வளர்த்தவர்களைக் கடைசி வரை கண் கலங்காமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு பிள்ளையின் கடமை.” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த உரை வெளியானதும், சமூக வலைத்தளங்களில் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பெற்றோர்களை கவனிக்காமல் விடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிவகுமார் கூறிய இந்த கருத்து பலருக்கும் விழிப்புணர்வாக அமைந்துள்ளது.

சிலர் இந்த உரையை ஆதரித்து, “பெற்றோர்களின் தியாகத்தை மறக்கக்கூடாது” என கருத்து தெரிவிக்க, மற்றொருபக்கம் இளம் தலைமுறையினர் இதை சிந்திக்க வைக்கும் கருத்தாக பாராட்டி வருகின்றனர்.


Advertisement

Advertisement