• May 08 2026

மீண்டும் இணையும் பாக்கியா - கோபி.. 'ஆதலால் காதல் செய்வீர்' சீரியலில் ட்விஸ்ட்

shali / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சதீஷ்–சுசித்ரா ஜோடி, மீண்டும் புதிய தொடரில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘பாக்கியலட்சுமி’, குடும்ப கதையையும் பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்திய தொடராகப் பார்க்கப்பட்டது.


இந்த சீரியலில் நடித்த சதீஷ் மற்றும் சுசித்ரா ஜோடி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்களின் திரை ரசனை மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு, தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதனால், இந்த ஜோடி மீண்டும் இணைகிறார்கள் என்ற செய்தி ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.

இவர்கள் இணையும் புதிய சீரியலுக்கு ‘ஆதலால் காதல் செய்வீர்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் மீண்டும் விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாக உள்ளது. காதல் மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த தொடரில், ரசிகர்களை கவரும் பல புதிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த புதிய தொடரில் நாயகனாக பாரதி கண்ணம்மா மூலம் பிரபலமான நடிகர் அருண் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது சீரியல் ரசிகர்களுக்கு இன்னும் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement