தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழும் விஜய், தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதும் சினிமாவிலிருந்து விலகி மக்களுக்காக அரசியலில் கால் பதித்துள்ளார். இவர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து மக்களுக்கான தனது சேவையை முன்னெடுத்து வருகின்றார்.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை மையமாகக் கொண்டு இவருடைய கட்சி நடவடிக்கைகள் தனிப்பட்ட செயல்பாடுகளாக முன்னெடுக்கப்பட்டது.
எனினும், நடிகர் விஜய் அரசியலில் நுழைந்த பிறகு அரசியல் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அடுத்தடுத்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றார்.
அதன்படி, விஜயின் இறுதிப் படம் “ஜனநாயகன்” ஜனவரி பொங்கல் தினத்துக்கு முன்னிட்டு வெளிவர திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் இந்த படத்தில் ஏற்பட்ட சென்சார் பிரச்சனைகளால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், அவரது மனைவி விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான உண்மை நிலவரம் தெரியாத நிலையில், பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
மேலும், கரூர் பிரச்சார பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலும், விஜய் சிபிஐ விசாரணைக்கு அடிக்கடி சென்று வருகின்றார்.

இன்னொரு பக்கம், சங்கீதாவின் விவாகரத்துக்குப் பிறகு, அவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் திரிஷா என்பதாக சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை மேலும் உண்மையாக்கும் வகையில், சமீபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் இருவரும் ஒரே இடத்தில் ஆடை அணிந்து சென்றது பெரிதும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில், விஜய்-திரிஷா இடையிலான உறவு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில், நீல நிற சேலையில் திரிஷா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதேபோல, நடிகர் விஜய் சமீபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அதே நேரத்தில் ஷர்ட் அணிந்து சென்றிருந்தது தற்போது மீண்டும் சர்ச்சைக்கு காரணமாக உள்ளது. இந்த விவகாரம் ஆடை விஷயத்தில் மேலும் சூடு பிடித்துள்ளது.
Listen News!