• Jan 19 2025

இனிமேல் மீனா யாருக்கும் சமைக்க மாட்டா.. விஜயா- ரோகிணி அதிர்ச்சி..புதிய ப்ரோமோ வீடியோ..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திருப்பம் ஏற்படுவதன் காரணமாகத்தான் டிஆர்பியில் இந்த சீரியல் முன்னணி இடத்தை பிடித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகிய ப்ரமோ வீடியோவில் மீனா உடல்நிலை சரியில்லாமல் அறையில் படுத்திருக்கும் நிலையில், மனோஜ், விஜயாவிடம் ‘பாருங்கம்மா, என் ரூமில் அவ படுத்து இருக்கா’ என்று விஜயாவிடம் புகார் அளிக்கிறார். இதனை அடுத்து விஜயா மீனாவை எழுப்பி ’எந்திரிச்சு வெளியே வா’ என்று கையை இழுத்துக் கொண்டு வருகிறார். அப்போது தனக்கு உடல்நலம் இல்லை என்று மீனா கூறியதையும் கேட்காமல் இழுத்து வரும் போது முத்து அதை பார்த்து விடுகிறார். ’மீனாவுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் நான் தான் அந்த ரூமில் ரெஸ்ட் எடுக்க சொன்னேன்’ என்று முத்து கூறுகிறார்.



இதனை அடுத்து மீனா ரெஸ்ட் எடுத்துவிட்டு வெளியே வரும்போது ’காலையில் எழுந்து சமைக்க வேண்டும் என்பது உனக்கு தெரியாதா? எல்லாரும் வேலைக்கு போக வேண்டாமா? என்று விஜயா மீனாவிடம் கேட்க, அப்போது அங்கே வரும் போது ’இனிமேல் மீனா யாருக்கும் சமைக்க மாட்டா, உங்களுக்கு மட்டும்தான் சமைப்பா, மற்றவர்களுக்கு வேண்டும் என்றால் அவர்களே சமைத்துக் கொள்ள சொல்லுங்கள்’ என்று ஆவேசமாக கூறியதை அடுத்து விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

அடுத்த வாரம் வெளியாக இருக்கும் இந்த காட்சிகள் ’சிறகடிக்க ஆசை’ சீரியலை மேலும் விறுவிறுப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement