• Sep 08 2024

சர்தார் பாகம் இரண்டின் புது அப்டேட்! படப்பிடிப்பு ஆரம்பம்

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் வெளியாகும் அனைத்து படங்களுமே அமோக வெற்றி அடைந்ததும் அதன் இரண்டாம் பாகம் தயாராக ஆரம்பிக்கும் . அவ்வாறே கார்த்தி நடித்து பிளாக் பஸ்டர் ஆகிய சர்தார் திரைபடத்தின் புதிய அப்டேட்கள் கிடைத்துள்ளன.


பி. எஸ். மித்ரன் எழுதி இயக்கிய திரைப்படம் சர்தார் ஆகும். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் பாணரின் கீழ் எஸ். இலட்சுமண் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் ராசி கன்னா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, ரித்விக், யூகி சேது, அவினாஷ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இந்த நிலையிலேயே  சர்தார் திரைப்படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு, வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தகவல்; அஜர்பைஜான், ஐதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement