• May 08 2026

தனது 2 அப்பார்ட்மென்களையும் அடுத்தடுத்து விற்ற பிரபுதேவா.! எத்தனை கோடிக்கு தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா, இந்திய மைக்கல் ஜாக்சன் என ரசிகர்களால் செல்லமாக அழைத்து கொண்டாடப்படுகிறார்.

இந்த நிலையில்,  மும்பையில் வைத்திருந்த தனது சில வீடுகளை நடிகர் பிரபுதேவா விற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமா மற்றும் நடன துறையில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் பிரபுதேவா, மும்பையில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். 

அந்த காலத்தில் முதலீடாக சில சொத்துகளையும் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவற்றில் சில வீடுகளை விற்பனை செய்துள்ளார் என்பதும் தகவலாக வெளியாகியுள்ளது.


அதன்படி நடிகர் பிரபு தேவா மும்பையில் தனக்கு சொந்தமான இரண்டு அப்பார்ட்மென்களை விற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு வாங்கிய இந்த இரண்டு வீடுகளும் தற்போது 14.80 கோடிக்கு விற்றதாகவும் சமீபத்தில் அதற்கான பத்திரப்பதிவு நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான முக்கிய காரணமாக, அவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் மீண்டும் அதிக கவனம் செலுத்தி வருவதும், தனது நிரந்தர வசிப்பிடத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்திருப்பதும் கூறப்படுகிறது. மேலும், தனிப்பட்ட காரணங்களாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

Advertisement

Advertisement