• Apr 15 2026

மயிலின் ரகசியத்தை உடைத்த மீனா.. உறைந்து போன ராஜி.! அதிரடி ஆட்டத்துடன் டுடே எபிசொட்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மயிலும் மீனாவும் பஸ் ஸ்டாண்டில இருந்து கதைச்சுக் கொண்டிருக்கும் போது ராஜி அதைப் பார்க்கிறார். பின் ராஜி மீனாவைப் பார்த்து நீங்க வேலைக்குப் போகலயா என்று கேட்கிறார். மேலும், வீட்டில நடந்த பிரச்னையை எல்லாம் மறந்திட்டீங்களா என்று கேட்கிறார். அதனை அடுத்து எப்படி உங்களால அவங்களை மன்னிக்க முடியுது என்று கேட்கிறார் ராஜி.

அதைக் கேட்ட மீனா எதுவுமே கதைக்காமல் அமைதியாக இருக்கிறார். பின் எல்லா விஷயத்தையும் உங்க கிட்ட சொல்லுறன் தானே பிறகு ஏன் மயில் அக்காகிட்ட பேசுற விஷயத்தை சொல்லேல என்று கேட்கிறார் ராஜி. அதுக்கு மீனா நீ பாட்டுக்கு உன்ர இஷ்டத்துக்கு கதைக்காத, என்னோட பக்கத்து நியாயத்தையும் கேட்கத்தானே வேணும் என்று சொல்லுறார்.


அதனை அடுத்து மீனா ராஜியை மயில் வேலை செய்யுற இடத்திற்கு கூட்டிக் கொண்டு போறார். அங்க மயிலைப் பார்த்த பிறகு ராஜி எதுவுமே கதைக்காமல் அமைதியாக இருக்கிறார். பின் மீனா நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார். மேலும், மயில் கர்ப்பமாக இருந்த விஷயத்தை சரவணன் கிட்ட சொன்ன போது சரவணன் அதுக்கு தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல என்று சொன்னதையும் சொல்லுறார்.

அதைக் கேட்ட ராஜி ஷாக் ஆகுறார். பின் மயில் நான் எல்லாரையும் நிறைய கஷ்டப்படுத்திட்டன் என்று சொல்லி அழுகிறார். அதனை அடுத்து ராஜி என்னால எதையும் முழுசா மறக்க முடியல என்று சொல்லுறார். இதைக் கேட்ட மயில் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற விஷயத்தை யாருகிட்டயும் சொல்ல வேணாம் என்கிறார். பின் ராஜி கதிர் கிட்ட மட்டும் மயில் அக்காவோட விஷயத்தை சொல்லவா என்று மீனாகிட்ட கேட்கிறார். அதுக்கு மீனா வேண்டாம் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement