கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த ’அமரன்’ படத்தால் கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன் இடையே சிறு மோதல் ஏற்பட்டதாகவும் இதனால் பஞ்சாயத்து செய்ய வேண்டிய அளவுக்கு நிலைமை முற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தார் சிவகார்த்திகேயனிடம் ’அமரன்’ படத்திற்காக 80 நாட்கள் கால்ஷீட் கேட்டதாகவும் ஆனால் 150 நாட்கள் தாண்டி படப்பிடிப்பு நடந்ததால் சிவகார்த்திகேயன் நொந்து போனதாகவும் ஒரு கட்டத்தில் தன்னுடைய கால்ஷீட் முடிந்து விட்டது என்று சிவகார்த்திகேயன் கூற, அதன் பிறகு கமல்ஹாசனே நேரடியாக களமிறங்கி பஞ்சாயத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் பிறகு வேறு வழியில்லாமல் சிவகார்த்திகேயன் கூடுதலாக 70 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ’அமரன்’ படத்திற்காக நடித்துக் கொடுத்ததாகவும் ஒரு வழியாக தன்னுடைய காட்சியின் படப்பிடிப்பை சிவகார்த்திகேயன் முடித்துவிட்டு இனிமேல் ராஜ்கமல் பிலிம்ஸ் பக்கமே வரமாட்டேன் என்று கூறிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மீதும் கமலஹாசன் அதிருப்தியில் இருப்பதாகவும் குறிப்பிட்ட நாள்களில் படம் எடுக்க முடியாது என்பது இயல்பு தான், ஆனால் அதே நேரத்தில் இரு மடங்கு காலதாமதம் செய்ததால் படத்தின் பட்ஜெட் எகிறி விட்டதாகவும் கூறி வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் படம் எடுத்தவரை போட்டு பார்த்த கமல்ஹாசன் திருப்தி அடைந்ததாகவும் காலதாமதம் ஆனாலும் படம் நன்றாக வந்திருக்கிறது என்று ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’அமரன்’ திரைப்படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கான ப்ரமோஷன் பணிகளை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Listen News!