• Jan 19 2025

நயன்தாராவுக்காக ரூ.100 கோடி அளவில் ரிஸ்க் எடுக்கும் விக்னேஷ் சிவன்.. அகலக்கால் ஆபத்தில் முடியுமா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாராவுக்காக அவரது கணவர் விக்னேஷ் சிவன் 100 கோடி ரூபாய் செலவில் ரிஸ்க் எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நடிகை நயன்தாரா பெற்றிருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு வெற்றி படங்கள் கிடைக்கவில்லை என்பதும் ’அன்னபூரணி’ ’இறைவன்’ ’கனெக்ட்’ ’கோல்ட்’ ’அண்ணாத்த’ ’நெற்றிக்கண்’ ஆகிய படங்கள் வரிசையாக அவருக்கு தோல்வி படங்களாக அமைந்த நிலையில் பாலிவுட் திரைப்படமான ’ஜவான்’ மட்டுமே வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது அவர் நடித்து வரும் ’டெஸ்ட்’ ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ’டியர் ஸ்டூடண்ட்’ ஆகிய படங்களும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை என்பதால் அந்த படங்களும் ரிலீஸ் ஆன பின்னர் தான் அதன் முடிவை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில் நடிகை நயன்தாராவை ஒரு சரித்திர படத்தில் நடிக்க வைத்து பார்க்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன் விரும்பி உள்ளதாகவும் அதற்காக அவர் கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சரித்திர படங்கள் என்றால் குறைந்த பட்சம் 100 கோடி ரூபாய் பட்ஜெட் ஆகும் என்ற நிலையில் துணிந்து ரிஸ்க் எடுக்க விக்னேஷ் சிவன் தயாராக இருப்பதாகவும் தனது ரெளடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அந்த படத்தை தயாரிக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சரித்திர கதையில் நயன்தாராவுக்கு இரண்டு வேடங்கள் கொண்ட முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் அவரை ஒரு படத்தில் நடிக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற விக்னேஷ் சிவனின் கனவு சீக்கிரம் நனவாகும் என்றாலும், அந்த படம் வெற்றி அடைய விட்டால் அகலக்கால் வைத்ததின் மூலம் மிகப்பெரிய சிக்கலை நயன்தாரா சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று திரை உலக வட்டாரங்கள் கூறி வருகின்றன.

ஆனால் நயன்தாராவுக்கு சரித்திர கதை  செட்டாகும் என்றும் அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையில் விக்னேஷ் சிவன் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement