• Sep 21 2024

விஜயின் ரூட்டை ஃபாலோ பண்ணும் சிவா -மீண்டும் பழைய ஸ்ரைலைக்கு திரும்பும் தளபதி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

1985 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து முன்னணி நடிகராக வளர்ந்தவர் தான் சிவகார்த்திகேயன். இவரின் மிமிக்கிரி திறமையின் மூலம் டிவி தொகுப்பாளராக அபிமுகமானார் .2012 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கிய மெரினாவில் திரைப்படத்தின் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார் .

அதனை தொடர்ந்து மனம் கொத்திப் பறவை,கேடி பில்லா கில்லாடி ரங்கா,எதிர்நீச்சல்,வருத்தபடாத வாலிபர் சங்கம் என பல படங்களில் நடித்துள்ளார் . இவருடைய திரைப்பட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்தாலும் அதில் இருந்து கிடைத்த அனுபவங்களின் மூலம் தற்போது சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகின்றார் .சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடி வசூலை தாண்டியுள்ளது என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன.இந்த படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்துள்ளது.

ஆரம்பத்தில் வியாய் குடும்ப செண்டிமெண்ட் படங்களை நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அது போலவே சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார் .ஆனால் தற்போது விஜய் குடும்ப சென்டிமென்ட் படங்களை நடிப்பதை நிறுத்தி விட்டு ஆக்சன் படங்களை நடித்து வந்தார். அந்த வகையில் மாஸ்டர் படம் மிக பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் பீட்ஸ் படம் எதிர் பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை சாதாரண விமர்சனங்களை மட்டும் தான் பெற்று கொண்டது .

இதனால் பீட்ஸ் படம் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. விஜய் தன்னுடைய அடுத்த படத்தில் இது போன்ற விஷயங்கள் இருக்க கூடாது என்று ரசிகர்கள் விரும்பும் படியான விஷயங்கள் இருக்கும் என்றும் கூறியுள்ளாராம். குடும்ப செண்டிமெண்ட் கதைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளதால் விஜய் மீண்டும் குடும்ப செண்டிமெண்ட் படங்களில் நடிக்கவுள்ளார். விஜய்க்கு அது குழந்தை ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அதனால் வம்சி இயக்கத்தில் உருவாக்கி கொண்டு இருக்கும் தளபதி 66 படத்தில் அத்வைத் வினோத் மற்றும் ஹர்ஷாதா கார்த்திக் என்ற இரண்டு குழந்தைகள் நடித்து வருகின்றனர்.இந்த இரு குழந்தைகளின் தந்தையாக விஜய் நடிக்கின்றார். என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் கதைக்கு எது முக்கியமோ அதை மட்டும் செய்யும் படியாகவும் தேவை இல்லாத விஷயங்களை தவிர்த்து கொள்ளவும் என்று விஜய் இயக்குனரிடம் கூறியுள்ளாராம். இவ்வாறு விஜய் தன்னுடைய படத்தை பார்த்து பார்த்து உருவாக்கி வருகின்றாராம். என தகவல்கள் வெளியாகி வருகின்றது.

Advertisement

Advertisement