• Sep 20 2024

43 வயதிலும் எளிமையான கியூட்னஸ்! KPY பாலாவுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடிய லைலா ! வைரலாகும் புகைப்படங்கள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை லைலா தனது பிறந்த நாளை Kpy பாலாவுடன் இணைத்து குறும்புத்தனத்துடன் கேரவனில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இவ்வாறு லைலா எளிமையாக கொண்டாடிய பிறந்த நாளின் புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலாகியுள்ளது.

அத்துடன், நடிகை லைலாவின் பிறந்த நாள் புகைப்படங்களை  Kpy பாலா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

நடிகை லைலா 'முதல்வன்' படத்தில் ரிப்போட்டர் என்ற வேடத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். ஆனாலும் மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தவர். 

இவ்வாறு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த லைலா, 2006-ம் ஆண்டு ஈரானை சேர்ந்த அவருடைய காதலரான மெஹ்தின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்திற்கு பின் நடிக்க மறுத்த லைலா, தற்போது அவருடைய  மகன்கள் இருவருமே வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டதால் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அத்துடன், தளபதி 68 படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இவ்வாறான நிலையில், kpy பாலாவுடன் மிகவும் கியூட்டாக பிறந்தநாள் கொண்டாடிய லைலாவின்  புகைப்படங்கள் தற்போது வைரலாகி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும்  குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement