• Sep 19 2024

சிம்பு, ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு-குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இது தவிர தெலுங்கு சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

மாப்பிள்ளை திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீய வேலை செய்யணும் குமாரு, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, வேட்டை மன்னன், ரோமியோ ஜுலியட் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.

மேலும் இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருந்த நிலையில் இப்போது சிம்புவின் மாநாடு ரிலிஸ் ஆகி பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் மஹா படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப் படம் வரும் ஜூன் மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்போடு படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement