• Jul 05 2025

மௌனம் பலவீனமல்ல... பொறுமை..! கூல் சுரேஷ் குறித்து ஐஸ்வர்யாவின் பரபரப்பான பேட்டி..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் மீடியா மற்றும் யூடியூப் உலகில் தொகுப்பாளராக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா, சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், தன்மீது தொடர்ந்து ஏற்படும் விமர்சனங்கள் குறித்து மிகவும் சிறப்பாகப் பேசியுள்ளார். குறிப்பாக, நடிகர் கூல் சுரேஷ் தொடர்பாக அவர் அளித்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வைரலாகி வருகின்றன.


ஐஸ்வர்யா பேசியபோது, கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு நிகழ்வில், நடிகர் கூல் சுரேஷ் தன் மீது நடந்து கொண்டதைக் குறிப்பிட்டுள்ளார். அதன்போது அவர் கூறியதாவது, “நான் அமைதியாக இருப்பதற்காக என்னை பலவீனமாக நினைக்கும் ஆண்கள், தங்கள் வலிமையை என்மீது காட்ட நினைக்கிறார்கள். அத்துடன் மேடையில் ஒரு நடிகர் வெற்று விளம்பரத்திற்காக என்னுடைய கழுத்தில் மாலை போட முயற்சித்தபோது, நான் அமைதியாக நின்றேன்." எனத் தெரிவித்திருந்தார். அந்த நடிகர் வேறுயாரும் இல்லை கூல் சுரேஷ் தான்.


அதே நேர்காணலில் ஐஸ்வர்யா கூறியதாவது, “அந்த நடிகரோட கன்னத்தில் பழுக்கவைத்திருந்தா அல்லது உடனே பொலீஸ் கம்பிளைன் கொடுத்திருந்தா, இந்த அளவுக்கு இப்போ சமூக வலைத்தளங்களில் எல்லோரும் என்னைக் குறை சொல்ல முடியாது.” என்றார்.


Advertisement

Advertisement