• Apr 26 2024

தான் ஊரில் இல்லை என்று என்னிடம் பொய் சொன்னாள்- தோழி கலா மாஸ்டருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீனா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை மீனா.இவர் கடந்த 2009ம் ஆண்டு தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்ததால் சினிமாவிலிருந்து விலகினார்.

இந்த தம்பதியருக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். தற்பொழுது மீண்டும் நல்ல கதாப்பாத்திரங்கள் உள்ள படத்தைத் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.குடும்பமாக அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், கடும் துயரம் ஒன்று அவர்களை சூழ்ந்து கொண்டது.


கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று, மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவு, திரையுலகினர் அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. கணவரின் மறைவால், கடுமையாக மனமுடைந்து போன மீனா, அவரது நினைவால் சில மனம் உருகும் பதிவுகளையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

இதன் பின்னர், கணவர் உயிரிழந்து ஒரு மாதங்கள் கழித்து நடிகைகள் மற்றும் தோழிகளான ரம்பா, சங்கவி மற்றும் சங்கீதா ஆகியோர், குடும்பமாக வந்து மீனாவை சந்தித்திருந்தனர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பகிர்ந்திருந்தார்.


 இந்நிலையில், பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டரின் திருமண நாளை முன்னிட்டு நடிகை மீனா கொடுத்த சர்ப்ரைஸ் தொடர்பான விஷயம், ரசிகர்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது. இது தொடர்பாக கலா மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


அத்தோடு தனது கேப்ஷனில், "நேற்று மீனா என்னிடம் ஊரில் இல்லை என பொய் சொல்லியிருந்தார். இதனால், என்னுடைய திருமண நாளன்று அவர் இல்லை என்பதால் நான் சற்று வருத்தம் அடைந்தேன். ஆனால், திடீரென வந்து என்னை அவர் ஆச்சரியப்படுத்தினார். லவ் யூ மீனா" என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் மறைந்த சமயத்தில், முழுக்க முழுக்க கலா மாஸ்டர் தான் மீனா அருகே இருந்து அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டார். அப்படி தனது துயரின் போது உடனிருந்து தன்னை பார்த்துக் கொண்ட கலா மாஸ்டருக்கு வேற லெவலில் இன்ப அதிர்ச்சி கொடுத்தது தொடர்பான விஷயம், பலரையும் நெகிழ வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement