• May 06 2024

எனக்கும் இது தெரியாது மாமியாருக்கும் சுத்தமா தெரியாது- குடும்ப ரகசியத்தை உடைத்த தொகுப்பாளினி கிகி

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் தான் பாக்கியராஜ்.இவர் நடிகை பூர்ணிமாவைத் திருமணம் செய்திருப்பதோடு இவர்களுக்கு சாந்தனு என்ற மகன் இருப்பதும் தெரிந்ததே. சாந்தனு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் தனக்கான ஓர் அடையாளத்தை பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.

மேலும் சாந்தனு கடந்த 2008 ஆம் ஆண்டு சர்க்கரை கட்டி படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அம்மாவின் கைபேசி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், வாய்மை, வானம் கொட்டட்டும், பாவக்கதைகள், குரு, கசடதபர, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் 


மேலும் இவர் தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்தை அடுத்து இருவரும் ரொமான்டிக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் கூட இவர்கள் கடற்கரையில் இருந்தபடி பாடலுக்கு பர்ஃபார்ம் செய்திருந்த வீடியோ சமூக வலைதளத்தை பரவி இருந்தது.


மேலும் கீர்த்தி தற்பொழுது ஷு தமிழில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து வருகின்றார். அந்த நிகழ்ச்சியில் தனது மாமியார் பூர்ணிமா மற்றும் தனது தாயுடன் பங்கேற்ற கீர்த்தி சாந்தனு. மாமியார் குறித்த சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார்.


அதில் தனக்கும் தனது மாமியாருக்கும் சமைக்கவே தெரியாது. பாக்கியராஜ் உடனிருந்து பரிமாறும் பழக்கம் கொண்டவர் தனது மாமியார். எப்போதுமே தன்னை திட்ட மாட்டார் என பல சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.இந்த தகவல் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது.

மேலும் பூர்ணிமா பாக்கியராஜ் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பிரபலமான நடிகையாக இருந்தார் என்பதோடு தற்பொழுது சீரியல்களில் நடித்து வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.


Advertisement

Advertisement

Advertisement