• Apr 26 2024

நெருப்புக்குள் குதித்த சக்தி...வருண் செய்த காரியம்..பரபரப்புடன் வெளியான ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மௌன ராகம் சீரியல் அடுத்தடுத்த விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகின்றன. அதில் கதாநாயகன் வருணுக்கு தனது தாயார் தீவிபத்தில் இறந்து விட்டதாக நினைத்து மனநோய் ஏற்படுகின்றது.தீயை பார்த்தாலே அவர் பயந்து அலறி மயங்கி விழுந்து விடுவார். 

அந்த அளவிற்கு நெருப்பின் மீது அவருக்கு பயம் உள்ளது. இவ்வாறுஇருக்கையில் அவரது மனைவி சக்தியின் இசைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பேனர் எரிவதை கண்ட அவர் தனது தாயார் போல் சக்தியும் எரிந்து விடுவாரோ என்ற பயத்தில் அலறி துடித்துக் கொண்டிருக்கிறார்.

 மேலும் அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் எந்தவித பலனும் இல்லாமல் இருக்கிறது. இதற்கிடையே தனது தாய் இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மீண்டும் உயிருடன் வந்து விட்டார்.

தனது தாயைப் பார்த்த பிறகு வருண் மனநிலை சரியாகும் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து விட்டது. சக்தியை பார்த்தால் மட்டுமே அவர் பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார். 

வருண் அம்மாவுக்கும் இவ்வளவு நாள் நினைவு சரியில்லாமல் இருக்கும் நிலையில், அவருக்கும் நினைவுத்திரும்பி மகனிடம் சென்று என்னை பார், என்னிடம் பேசு என்று அழுது புலம்பி கொண்டிருக்கிறார். ஆனால் வருணுக்கு அனைத்துமே மறந்து விட்டது. 

மேலும் இதை எப்படியாவது சரி செய்ய வேண்டுமென்று சக்தி முடிவு எடுத்து, தங்களது வீட்டாரிடம் ஒரு யோசனையை சொல்கிறார். 15 வருடங்களுக்கு முன்பு எப்படி தீ விபத்து ஏற்பட்டு அவர் அம்மா இறக்கவில்லை என்று அந்த காட்சியை மீண்டும் நினைவு படுத்தினால் வருணுக்கு நினைவு சரியாகும் என்று சக்தி வீட்டிலுள்ள அனைவரிடமும் கூறுகிறார்.

ஆனால் இது தவறான முடிவு. இதை செய்ய வேண்டாம் என்று சக்தியின் மாமனார் மறுக்கிறார். ஆனால் இதை செய்து காட்டுவேன் என்று சொல்லி கோவிலில் வைத்து தீ மூட்டி அதற்கு நடுவில் நிற்கிறார் சக்தி. வருண் சரியாக வேண்டும் என்கிற காரணத்திற்காக தன் உயிரை பணயம் வைக்கிறார் சக்தி. 

அப்போது நெருப்பை பார்த்து கதறி அழும் வருண் நெருப்புக்கு உள்ளே சென்று சக்தியை காப்பாற்றி விடுகிறார். இதனால் வருணுக்கு இவ்வளவு நாள் நெருப்பின் மீது இருந்த பயம் இனிமேல் போய் விடும் என்று தெரிகிறது. ஆனால் வருணுக்கு சக்தியின் நினைவுகள் எல்லாம் மறந்துவிடும் என்றும் தெரிகிறது. 

இதோ அந்த ப்ரமோ..


Advertisement

Advertisement

Advertisement