• Sep 21 2023

காதலிக்காக 'ஜவான்' பட இலவச டிக்கட் கேட்ட வீணாய்ப் போன காதலன்... ஷாருக்கான் கொடுத்த சூப்பர் பதில்..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய்யின் 'பிகில்' படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜவான்'. இப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்து வருகிறார். அத்தோடு நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. 

அந்தவகையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘வந்த இடம்’ ஏற்கெனவே தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் அடுத்த பாடலான ‘ஹையோடா’ பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.


இந்நிலையில் சமீபத்தில் ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். இதில் ஒரு ரசிகர் ஷாருக்கானிடம் "என்னுடைய காதலிக்காக, ஜவான் படத்தின் இலவச டிக்கெட் ஒன்றை எனக்கு நீங்கள் வழங்க முடியுமா?, நான் ஒரு வீணாப்போன காதலன்" எனக் கூறியுள்ளார். 

இதற்கு ஷாருக்கான் "நான் அன்பை மட்டுமே இலவச அடிப்படையில் வழங்குபவன். காதல் என வரும்போது, அதில் மலிவான நபராக நடந்து கொள்ளாதீர்கள். போய் டிக்கெட் வாங்குங்கள். பின்னர், உங்களுடன் காதலியையும் அழைத்து செல்லுங்கள்" என பதிலளித்து உள்ளார். இவரின் இந்த அருமையான பதிவானது பலரையும் கவர்ந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement