• Oct 16 2024

வைத்தியசாலையில் நடக்க முடியாமல் இருக்கும் serial actress Kalyani- வெளியாகிய அதிர்ச்சி Video

stella / 1 year ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்கியவர் தான் நடிகை கல்யாணி. சிறுவயதிலேயே இருந்து நடிக்க ஆரம்பித்த இவர் கிட்டத்தட்ட 300 விளம்பரங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

அதன்பிறகு 2001 முதல் 2009 வரை படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்தார். சின்னத்திரையில் 8 சீரியல்கள் மெயின் ரோலில் நடித்துள்ளார், தொகுப்பாளராகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.


2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரோஹித் என்பவரை திருமணம் செய்துகொண்ட கல்யாணிக்கு இப்போது ஒரு மகள் உள்ளார்.இடையில் சின்னத்திரை பக்கம் வராமல் இருந்த கல்யாணி மீண்டும் தொகுப்பாளராக கலக்கி வந்தார்.

இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றைப் போட்டுள்ளார். அதில் கடந்த ஒன்றரை மாதம் ம்ம்ம்ம்... மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வாக இருந்தது. எனது உடல்நிலையில் அடிமட்டத்தை அடைந்தேன்.கடந்த 2016-ல் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன், சிறிது காலம் நலமாக இருந்தேன், அதன் பிறகு நவ்யாவை பெற்றெடுத்தேன்.

 கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன். இங்கு முதுகெலும்பு நிபுணரிடம் ஆலோசித்தோம், நான் கேட்கமாட்டேன் என்று நினைக்காத ஒன்றைக் கேட்டோம்.. எனது முந்தைய அறுவை சிகிச்சை குணமாகவில்லை, இந்த முறை ஸ்க்ரூக்களை அகற்றிவிட்டு வேறொன்றைப் பெற வேண்டும் என்றார். 


அதன்படி தற்பொழுது ஒரு அறுவைச் சிகிச்சை செய்துள்ளோம். இந்த முறை குணமாக நேரம் எடுக்கும், ஆனால் கட்டாயம் குணமாகி விடுவேன் என்றும் என் குடும்பத்திற்கு நம்பிக்கையுடனும் நன்றியுடனும் இருக்கிறேன். நான் என் உடலை இனி ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement