பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செல்வியோட பையனத் தான் இனியா காதலிக்கிறாள் என்று தெரிஞ்சோன ஈஸ்வரி அவளை அடிக்கிறாள். உடனே செழியன் பாட்டி என்ன பண்ணுறீங்கள் என்று கேட்டு ஈஸ்வரியை தடுக்கிறான். பிறகு ஈஸ்வரி உலகத்தில வேற ஆளே இல்லை என்ற மாதிரி போயும் போய் வேலைக்காரி பையனயா லவ் பண்ணுறா என்று கேக்கிறார்.
பின் செல்விக்கு வேலை இல்லை என்றா அவன் சாப்பாட்டுக்கே பிச்சை எடுப்பான் அவன் தான் உனக்கு வேணுமா வெக்கமா இல்லையாடி உனக்கு என்றார் ஈஸ்வரி. பிறகு எழிலும் இனியாவ பேசுறான். அதனைத் தொடர்ந்து கோபி நமக்குனு ஒரு அந்தஸ்து இருக்கு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துகொள் என்றார். இப்படியே மாறி மாறி எல்லாரும் இனியாவ பேசிக்கொண்டிருந்தார்கள் ஆனால் பாக்கியா மட்டும் எதுவும் கதைக்காமல் இருந்தார்.
அதனைப் பார்த்த ஈஸ்வரி பாக்கியா அருகில் போய் உனக்கு சொல்லுறதுக்கு எதுவுமே இல்லையா என்று கேக்கிறார். பிறகு இண்டைக்கு இந்த வீட்ட நடந்த சீரழிவுக்கு நீ தான் காரணம் என்று பாக்கியாவிடம் சொல்லுறார். அதுக்கு கோபி ஏன் அம்மா நீங்க பாக்கியாவ போய் பேசுறீங்கள் அவள் என்ன செய்வாள் என்றான்.
பின் ஈஸ்வரி இந்த விஷயம் யாருக்காவது தெரிஞ்சா வெளில தலை காட்டமுடியுமா என்று கேக்கிறார்.இதனைக் கேட்ட எழில் மறுபடியும் இனியாவ பேசுறான். இப்படியே அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போது இடையில செல்வி வந்து நிக்கிறாள்.அவளைப் பாத்தவுடனே எல்லாரும் அமைதியாக இருக்கிறார்கள். பின் எல்லாரும் சேர்ந்து செவ்வியைப் பேசுறார்கள். அதைத் தொடர்ந்து செல்விய வீட்ட விட்டுப் போகச்சொல்லுறார்கள். அதற்கு பிறகு செல்வி வீட்ட வந்து ஆகாஷை அடிக்கிறாள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!