• Apr 29 2024

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் திரைவிமர்சனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் 10 வருடங்களுக்குள் அபார வளர்ச்சி கண்ட நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெறுவதோடு வசூலிலும் அள்ளிக் குவிப்பதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகமாகக் காணப்படுகின்றது.

அந்த வகையில் இவரு நடிப்பில் இன்றைய தினம் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் பிரின்ஸ். இப்படத்தை தெலுங்கு இயக்குநரான அனுதீப் குமார் இயக்கியிருந்தார். இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாகியுள்ளது.


அதன் படி படத்தின் கதைக் களமாவது 

தேவகோட்டை என்னும் ஊரில் சுதந்திரத்திற்கு பிறகும் சில பிரிட்டிஷ்காரர்கள் தங்கி விடுகின்றனர். இப்படியான நிலையில் பள்ளி வாத்தியாரான சிவகார்த்திகேயன் பிரிட்டிஷ்கார பெண் ஜெஸ்ஸி என்பவரை காதலிக்கிறார். ஜெசிகாவிடம் தனது காதலை சிவகார்த்திகேயன் கூற, முதலில் அதை ஏற்க மறுக்கிறார் ஜெசிகா.

இதன்பின், அடுத்துதடுத்து ஒவ்வொரு விஷயத்திலும் ஜெசிகாவை இம்ப்ரஸ் செய்யும் சிவகார்த்திகேயன் மீதி, ஜெசிகாவிற்கு காதல் மலர்கிறது. சிவகார்த்திகேயனிடம் தனது காதலை வெளிப்படுத்தும் ஜெசிகாவை தனது தந்தை சத்யராஜிடம் அழைத்து சென்று, இவள் தான் நான் காதலிக்கும் பெண் என்று சிவகார்த்திகேயன் கூற, முதலில் ஆனந்தத்தில் துள்ளி குதிக்கிறார் சத்யராஜ். பின்பு தன் மகன் காதலிக்கும் பெண் ஒரு பிரிட்டிஷ் என்று தெரிந்துகொள்ளும் சத்யராஜ், இந்த காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்..


சத்யராஜின் தாத்தாவை சுதந்திர போராட்டத்தில் பிரிட்டிஷ்காரர்கள் கொன்றதால், பிரிட்டிஷ் மீது தனக்கு தீராத கோபம் இருக்கிறது என்றும், இதனால் ஜெசிகாவை தனது மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சத்யராஜ் கூறுகிறார். மறுபுறம் ஜெசிகாவின் தந்தையும் இந்த காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். இந்த அணைத்து பிரச்சனைகளையும் சமாளித்து தனது காதலி ஜெசிகாவை திருமணம் முடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தை பற்றிய அலசல்

சிவகார்த்திகேயன், இப்படத்தில் தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதோடு நடனத்தில் பின்னிப் பெடலெடுத்துள்ளார். அத்துடன் ஹுரோயினுடன் செய்யும் ரொமான்ஸ் சேட்டைகள் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.


 அதே போல சத்யராஜ் தன்னுடைய காமெடி நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.சிவகார்த்திகேயனுக்கும் இவருக்கும் இடையில் இருக்கும் கெமிஸ்ரி வேற லெவலில் உள்ளது.

முதல்முறையாக வித்தியாசமாக திரையில் தெரிந்த பிரேம்ஜியின் நடிப்பு ரசிக்கக்கூடியதாக இருந்தது..சிவகார்த்திகேயனின் நண்பர்களாக நடித்துள்ள சதீஸ், பிராங்க்ஸ்டர் ராகுல், பாரத் என மூவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். நடிகர்கள் சூரி மற்றும் ஆனந்த்ராஜ் சில நிமிடங்கள் வந்தாலும் திரையரங்கை அதிரவைத்துவிட்டார்கள்.

மேலும் காமெடி கதை களத்துக்கு ஏற்ப பிஜிஎம் கொடுத்து படத்துக்கு மேலும் பலம் சேர்த்துள்ளார் தமன். படத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்து அழகாக்கி உள்ளது.படத்தை ஒரு காமெடி கலாட்டாவாக அனுதீப் இயக்கியுள்ளார்.

படத்தின் பிளஸ் :

1. படத்தின் காமெடி

2. சிவகார்த்திகேயன், சத்யராஜ் என படத்தில் நடித்தவர்களின் நடிப்பு.

3. அனுதீப் இயக்கம்

படத்தின் மைனஸ் :

 வழக்கமான சில லாஜிக்கல் தவறுகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதோடு வெறும் காமெடி படமாகவே அமைந்துள்ளதால் ஒரு முறை மட்டும் பார்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement