• Sep 19 2024

சத்யா சீரியல் ஆயிஷா ரகசியமாக திருமணம் செய்து விட்டாரா?- ஆதாரத்துடன் வெளியாகிய முக்கிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்தவையாகவே உள்ளன. அதிலும் சூப்பர் ஹிட் சீரியல்களைத் தொகுத்து வழங்குவதில் விஜய் டிவி சன்டிவி ஷு தமிழ் என்பன முக்கிய இடம் வகிக்கின்றன


மேலும் இந்த ஆண்டு முழுவதும் சீரியல் பிரபலங்கள் பலரும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர். சில பிரபலங்களின் திருமணம் ரகசியமாகவும் நடைபெற்று வருகின்றது.


அந்த வகையில் சில நாட்களாக சத்யா சீரியல் பிரபலமான ஆயிசாவும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளதக தகவல் வெளியாகியிருந்தது. அதாவது அவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களில் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் அவர் திருமணம் செய்து விட்டதாக கூறியிருந்தனர். இந்த விடயத்தை உறுதிப்படுத்த ரசிகர் ஒருவர் அவரிடம் நேரடியாகக் கேட்டுள்ளார். அதற்கு பதில் கூறிய அவர் அதெல்லாம் இல்லைங்க நான் இன்னும் திருமணம் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement