ஜூன் 12-ம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2 ’திரைப்படமும், பார்த்திபன் நடித்த இயக்கிய ’டீன்ஸ்’ திரைப்படமும் வெளியானது. இதில் ’இந்தியன் 2’ திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சுமாரான வசூலையே அந்த படம் தந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் பார்த்திபன் இயக்கத்தில் உருவான ’டீன்ஸ்’ படத்திற்கு ஓரளவு பாசிட்டிவ் ரிசல்ட் வந்து கொண்டிருப்பதை அடுத்து இந்த படத்திற்கு இன்று அல்லது நாளை முதல் திரையரங்குகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது சின்ன பட்ஜெட் படம் என்பதால் மூன்று நாட்களிலேயே இந்த படத்தின் பட்ஜெட் கிடைத்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 'இந்தியன் 2 மற்றும் ’டீன்ஸ்’ ஆகிய இரண்டு படங்கள் போக இதே நாளில் வெளியான இன்னொரு திரைப்படம் ’சர்ஃபைரா’. சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்சயகுமார் நடிப்பில் உருவான இந்த படம் தமிழில் உருவான ’சூரரை போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 12ஆம் தேதி வெளியான நிலையில் முதல் நாளே இந்த படத்திற்கு ஆடியன்ஸ் வராமல் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ’சூரரை போற்று’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானதால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக பிம்பம் அமைக்கப்பட்டது.
ஆனால் அதே நேரத்தில் ’சர்ஃபைரா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் இந்திய அளவில் முதல் நாளில் வெறும் 2.40 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி இந்த படத்தின் காலை காட்சி, மதிய காட்சிகள் பல திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டதாகவும் ஒரு ஆடியன்ஸ் கூட வரவில்லை என்பதால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மும்பையில் தற்போது கனமழை பெய்து வருவது அடுத்து மாலை காட்சி இரவு காட்சிகளிலும் பெரிய அளவில் கூட்டம் இல்லை என்றும் 20% பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்குகளுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
சமீப காலத்தில் அக்சயகுமாரின் படம் மிக குறைந்த வசூல் செய்தது இந்த படம் தான் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 80 கோடி என்று கூறப்படும் நிலையில் முதல் நாளில் வெறும் ரூ.2.5 கோடி, இரண்டாவது நாளில் 2 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதை அடுத்து இந்த படம் இன்னும் ஐந்து கோடியை கூட வசூலை தொடவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக சூர்யா - ஜோதிகா தயாரிப்பு நிறுவனத்திற்கு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!