• Sep 20 2024

நடிகர் விஜய்சேதுபதிக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு படங்களை தெரிவு செய்து வரும் சரத்குமார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடச்த்திரமாக விளங்குபவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி . இவர் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் . இதைத்தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தக்க காணோம் ,நானும் ரவுடி தான், கடந்த 28 வெளியானகாத்து வாக்குல 2 காதல் போன்ற படங்களில் நடித்து மாஸ் ஹீரோ ஆனார் .

இவர் ஒரு வருடத்தில் 10 ,12 படங்களில் நடித்து வருகின்றார் . இவருக்கு மட்டும் எப்படி இவ்வளவு படம் வருகின்றது என சினிமா நடிகர்கள் பலர் ஆச்சரியப்படுகிறார்கள் . அந்த நிலையில் இப்பொழுது விஜய் சேதுபதிக்கு டப் கொடுக்கின்ற மாறி முன்னாள் நடிகர் ஒருவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றாராம்.

அது வேற யாரும் இல்லையாம் நம்ம சுப்பீரிம் ஸ்ரார் சரத்குமார் தானாம். இவர் ரஜினி,கமல் காலத்தில் நடிகனாக சினிமாவில் வலம் வந்தவராவார் . இடைப்பட்ட காலத்தில் சரியான படவாய்ப்புகள் அமையாததால் சிறிது இடைவெளியை எடுத்த நம்ம சுப்பீரிம் ஸ்டார் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் .

அதன்படி பொன்னியின் செல்வன், விடியல், நான்கு வழிச்சாலை ,நாநா ,பரம்பரா போன்ற படங்களில் நடித்துக்கொண்டுள்ளார்.இப்பொழுது தளபதியின் 66வது படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்துக்கொண்டுள்ளார்.இது போல 10இலிருந்து 15 வரையான படங்களில் நடித்துக்கொண்டுள்ளார் .

ரீ-என்ரியில் பட்டையைக்கிளப்பும் சுப்பீரிம் ஸ்டார் சரத்குமார் , விஜய் சேதுபதிக்கு பயங்கரமா டப் கொடுத்துக்கொண்டு வருகின்றார் என்று திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement