• Jan 18 2025

திருப்பதியில் சாமி தரிசனத்தில் சந்தானம்! அப்படி என்ன வேண்டியிருப்பார்? வைரலாகும் புகைப்படம்!

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகிய லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் சந்தானம் ஆவார். வடிவேலு , விவேக் போன்றவர்கள் உடல் அசைவுகளை வைத்து நகைச்சுவை செய்த காலத்தில் கலாய்க்கும் கௌண்டர்கள் மூலம் நகைச்சுவை செய்தவர் கவுண்டமணி ஆவார். அவ்வாறே சந்தானமும் அசத்தலா கௌண்டர்களை போடக்கூடியவர்.


இவர் சொல்லும் டைமிங் ஜோக்குகள் மூலமே இவர் பிரபலமானார். தொடர்ந்து விஜய் , ரஜனி , அஜித் என பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து காமெடியனாக நடித்த இவர் சமீபத்தில் ஹீரோவாக நடித்து வருகின்றார் . நடித்தால் ஹீரோவாகத்தான் இனி நடிப்பேன் என கூறி சமீபத்தில் இவர் நடிக்கும் படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை என்றே கூறலாம்.


இந்த நிலையிலேயே இவருடன் லொள்ளுசபாவில் நடித்து பின்பு பல திரைபடங்களிலும் இணைந்து நடித்த நடிகர் சேசு காலமானார். இவ்வாறு இருக்கையிலேயே நடிகர் சந்தானம் இந்தியாவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

Advertisement

Advertisement