விஜய் டிவியின் பிரபலமான மற்றும் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இந்நிகழ்ச்சியானது [அக்டோபர் 5] நேற்றைய தினம் பிரம்மாண்டமாக ஆரம்பமானது. முதல் நாளிலேயே பிரபலங்களின் வாக்குவாதங்கள் மற்றும் வைரல் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இச்சூழலில், இன்று வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில், ஹவுஸுக்குள் முதற்கட்ட ‘சண்டை’ அரங்கேறியுள்ளது. அதில், போட்டியாளர்களான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மற்றும் சீரியல் நடிகர் கம்ருதீன் இடையே ஒரு வாக்குவாதம் உருவாகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் யாரும் எதிர்பாராதவர்கள் எனும் விதத்தில் பல பிரபலங்களும், சமூக வலைத்தளங்களில் பிரபலமான new முகங்களும் சேர்த்துள்ளனர்.
போட்டியாளர்கள் பட்டியலாக, வாட்டர்மெலன் திவாகர், விஜே பார்வதி, அரோரா (பலூன் அக்கா) , கனி, இயக்குனர் பிரவீன் காந்த் , சீரியல் நடிகர்கள் சபரி மற்றும் கம்ருதீன், ரம்யா ஜோ & சுபிக்ஷா, துஷார், கானா வினோத், அகோரி கலையரசன், ஆர்ஜே கெமி, நந்தினி, மாடல் அழகி வியானா என 20 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இன்றைய ப்ரோமோவில், கம்ருதீன், திவாகரிடம் நேரடியாகப் பரபரப்பான உரையாடல் ஒன்றை தொடங்குகிறார். அவர் கூறுயதாவது, "உங்களுக்கு நடிப்பைப் பற்றி என்ன தெரியும்? அதை பற்றி பேசவே கூடாது... நீங்கல்லாம் ஆக்டர்ன்னு சொல்லாதீங்க! 5 படங்கள் பண்ணீங்களே, அதில் ஒரு படத்திலயாவது உங்க நடிப்பு பாக்கிற மாதிரி இருக்கா? வாங்களேன்... ரெண்டு பேரும் ஒரு சீன் நடிச்சு காமிக்கலாம்!" என்று கூறியுள்ளார்.
இதன் மூலம், கம்ருதீன் திவாகரின் நடிப்புத் திறனை நேரடியாக சவால் செய்கிறார். இது ரசிகர்களிடம் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!