கன்னட நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் உலக அளவில் சுமார் 7 மொழிகளில், 70000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்த படம் ரிலீஸ் ஆன நாளிலிருந்து தற்போது வரையில் எல்லா இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாகவே ஓடிக் கொண்டிருக்கின்றன. இதனால் இந்த படத்தின் வசூல் ஆயிரம் கோடியை தாண்டி சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டிக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்திருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது.
இந்த நிலையில், காந்தாரா சாப்டர் 1 படம் ரிலீஸாகி நான்கு நாட்களிலேயே 300 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இந்த தகவல் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அதன்படி இந்தப் படம் நான்காவது நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.61.5 கோடி வசூலித்து உள்ளது. அதில் அதிகபட்சமாக அப்படத்தின் இந்தி வெர்ஷன் ரூ.23.5 கோடியும், கன்னட வெர்ஷன் ரூ.15.5 கோடியும், தெலுங்கு பதிப்பு ரூ.11.25 கோடியும், தமிழ் வெர்ஷன் ரூ.6.5 கோடியும், மலையாள வெர்ஷன் ரூ.4.75 கோடியும் வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!