• Dec 08 2023

கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக்கில் நடிக்கும் சிவகார்த்திகேயன்- அடடே இவர் தான் இயக்குகின்றாரா?

stella / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர்.தனது படங்களில் ரசிகர்களை கெடுக்கும் வண்ணம் எந்த விஷயமும் இருக்க கூடாது என பார்த்து பார்த்து படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஒரு கிராமத்து கதை படம் என்றால் மற்றொன்றும் நகர் புரங்களில் வலம் வரும் கதைகளாக மாற்றி மாற்றி நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளியாகிய ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


இதனை அடுத்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் 2024 -ம் ஆண்டு வெளியாக இருக்கிறது. இது தவிர  ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும்  புதிய படத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை இயக்குநர் அருண் காமராஜ் இயக்கவிருக்கிறார் என்று கூறப்படுகின்றது. சிவகார்த்திகேயன் இதற்கு முதல் அருண்காமராஜ் இயக்கத்தில் உருவான கனா படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement