• Jun 01 2023

திருமணம் ஆகி ஒரே மாதத்தில் விவாகரத்து செய்து கொண்ட சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த்- பிரிவிற்கு இது தான் காரணமா?

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வரும் பிரபலங்கள் தமது திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் சம்பவர் ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள் உள்ளாக்கி வருகின்றது.

அந்த வகையில் நிறைமாத நிலவே வா என்னும் வெப் சீரியலில் நடித்ததன் மூலம் ரிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் தான் சம்யுக்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சிற்பிற்குள் முத்து என்னும் சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த விஷ்ணுகாந் என்பரைக் காதலித்து ஒரு மாதத்திற்கு முதல் திருமணம் செய்து கொண்டார்.


இவர்கள் காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன ரசிகர்கள் மத்தியில் வைரலானது போல திருமணப் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. அதாவது விஷ்ணுகாந் அண்மையில் சம்யுக்தாவுக்கும் தனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பது போல ஒரு பதிவினைப் போட்டிருந்தார்.

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்யுக்தாவுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் நீக்கியதோடு சம்யுக்தாவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியும் உள்ளார். அதே போல சம்யுக்தாவும் தன்னுடைய திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை நீக்கியுள்ளார்.


இதனால் இவர்கள் இருவரும் உண்மையாகவே பிரிந்து விட்டார்கள் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் இவர்கள் பிரிந்து விட்டதற்கான காரணத்தை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement