• Aug 31 2026

தாயாகும் சமந்தா.. குழந்தை பெயர் விஷயத்தில் இப்படி ஒரு குழப்பமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

shali / 14 minutes ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதைத் தொடர்ந்து அவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள சில கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அன்றாட அனுபவங்கள் குறித்த பதிவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சமந்தாவிடம், “பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள்?” என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த சமந்தா, குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வது நினைத்ததைவிட மிகவும் கடினமான விஷயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நல்ல பெயர்களை பரிந்துரைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதனிடையே, தனது கர்ப்ப கால அனுபவம் குறித்தும் சமந்தா சில தகவல்களை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கர்ப்ப காலத்தில் இதுவரை சுமார் 11 கிலோ எடை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், தாய்மைப் பயணம் தனக்கு புதிய தன்னம்பிக்கையையும் மனவலிமையையும் அளித்துள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவின் இந்த வெளிப்படையான மற்றும் நகைச்சுவையான பதில்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக, குழந்தையின் பெயரை ரசிகர்களிடமே பரிந்துரைக்கச் சொன்னது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி, பலரும் தங்களுக்கு பிடித்த பெயர்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement