• Apr 01 2025

அவுஸ்ரேலியாவைச் சுற்றிப் பார்க்கும் சமந்தா...! ஸ்டைலிஷ் லுக்கில் மாஸா இருக்குறாங்களே!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைல் என்பவற்றால் வளர்ந்துள்ள சமந்தா ரூத் பிரபு, தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள புகைப்படங்களால் இணையத்தைக் கலக்கி வருகின்றார்.

அவுஸ்ரேலியாவிற்குச் சென்ற சமந்தா அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் அப்புகைப்படங்கள் ஊடாக தனது ரசிகர்களுக்கு "வாழ்க்கையில் அனுபவிக்கவும், ஓய்வெடுக்கவும் நேரம் எடுங்கள்" என்ற ஓர் அழகான கருத்தையும் வழங்கியுள்ளார்.


அவுஸ்ரேலியாவின் பிரசித்திபெற்ற சுற்றுலா இடங்களுக்குச் சென்ற சமந்தா ஹோட்டல் , கடற்கரைகளில் இருந்து எடுத்துள்ள புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மேலும் சமந்தா கடந்த சில ஆண்டுகளில் தனது ஆரோக்கியப் பயணத்தில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றார். 

அந்தவகையில் இந்த அவுஸ்ரேலியாப் பயணம் அவரது மன அமைதிக்கான பயணமாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் கருதுகின்றார்கள். இப்புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்திலேயே, லட்சக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்துள்ளன.



Advertisement

Advertisement