• Jan 18 2025

'நீ இல்லாம எப்படி தூங்கிறது' செழியன் போனுக்கு மாலினி அனுப்பிய வாய்ஸ்களை கேட்டு அதிர்ச்சியடையும் பாக்கியா! வசமாக சிக்கிக் கொண்ட செழியன்? Baakiyalakshmi Serial

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

காய்ச்சலில் இருக்கும் இனியாவிடம் சாப்பாடு கொண்டு போய், ;இனியா குட்டி எப்படி இருக்க; என்று கேக்க; கோவத்தில் இருந்த இனியா 'நான் எப்படி இருந்த உனக்கு என்ன? விசிட்டர் போல என்ன வந்து பாத்துட்டு போறியா? உனக்கு என்ன விட வேல தான் முக்கியம் 'என சொல்கிறார். இதற்கு பாக்கியா, 'அப்படி எல்லாம் இல்ல. எனக்கு கொஞ்சம் வேல இருந்துச்சுமா' என சொல்லி சமாதானம் செய்து சாப்பாடு கொடுக்கிறார். அந்த இடத்திற்கு கோபியும் வந்து இனியாவை பார்க்கிறார்.

மறுபக்கம், ஜெனியின் குழந்தையை தூங்க வைக்கிறார் பாக்கியா. இதன் போது 'ஆன்டி நீங்க செழியன் போன வாங்கி வச்சது நல்லம்' என ஜெனி சொல்கிறார்.'போக போக எல்லாம் பழகிடும்' என பாக்கியா சொல்ல' ஜெனி குழந்தையை உள்ளே கொண்டு சொல்கிறார். அந்த நேரத்தில் 'மாலினி போன் பண்ணினால' என செழியன் கேக்க' அவரை திட்டி அனுப்புகிறார் பாக்கியா. 


இதையடுத்து' செழியன் போனை ஒன் பண்ணி பார்க்கிறார் பாக்கியா. அதில் மாலினி அனுப்பிய வாய்ஸ்களை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். 'செழியா இப்ப வீட்டுக்கு வா இல்ல நான் உன் வீட்டுக்கு வருவன்' என்று சொல்கிறார்.இத கேட்ட பாக்கியா நாளைக்கு 9 மணிக்கு கோவிலுக்கு வருமாறு சொல்கிறார்.

அடுத்த நாள் காலையில் கோவிலுக்கு செல்கிறார் மாலினி. அங்கு செழியனை தேட, 'நான் தான் உன்ன வர சொன்னான்' என்று பாக்கியா சொல்ல, 'நீங்க நினைக்கிற மாதிரி உங்க பையன் நல்லவன் இல்ல. கல்யாணம் பண்ணினத மறைச்சி தான் செழியன் என் கூட பழகினான். கடைசில என்ன ஏமாத்திட்டான். நாம இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தம்' என சொல்லி ஆதரங்களை காட்ட முற்படுகிறார்.


எனினும், 'அவன் பண்ணின தப்பு தான். அவனுக்கு குடும்பம் இருக்கு' என மாலினிக்கு சொல்லி புரிய வைக்கிறார். எனினும் ஒன்றையும் தன் காதில் வாங்காம தான் சொன்னதையே சொல்கிறார் மாலினி. இறுதியில் 'ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்கிற அளவுக்கு நான் மோசமானவள் இல்ல ஆனா செழியன மட்டும் மன்னிக்க மாட்டன்' என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார் மாலினி. இதுதான் இன்றைய எபிசோட் 


Advertisement

Advertisement