• Apr 28 2024

“சலாம் ராக்கி பாய்.. ”கே.ஜி.எப் யாஷ் மகளின் வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். மேலும் இவர் ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

பின்ப பல படங்களில் நடித்த இவருக்கு உலகளவில் பிரபலமாக்கிய திரைப்படம் கே.ஜி.எப். ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியாகி இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பினை பெற்றது.

ஒரு கன்னட படம் தமிழில் வெளியாகி முதன்முறையாக மாபெரும் வெற்றி பெற்றது என்றால் யாஷ் நடித்த “கே ஜி எப்” தான் . இந்தப் படம் வெளியாகி இதுவரை 1000 கோடி வசூலைக் கடந்த விட்டது.தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசில் சாதனைகள் படைத்து வருகிறது

இப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொருவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளனர். அதிலும் கதாநாயகனாக நடித்த யாஷ் என்பவருடைய மார்க்கெட் அதிகரித்துள்ளது.

அத்தோடு இவர் அடுத்து எப்படியான படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாகவும் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் யாஷ் தனது மகளின் கியூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தினமும் காலை எழுந்ததும் மகள் "சலாம் ராக்கி பாய்" என அவரிடம் சொல்கிறாராம். அதை தான் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்

ரசிகர்கள் அதிகம் பேரை கவர்ந்து வரும் அந்த வீடியோ இதோ.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement