• Jul 10 2025

அமீர் கானின் மகனுடன் ஜோடியாகும் சாய் பல்லவி...!‘ஏக் தின்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்...!

Roshika / 14 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரைப்பட உலகில் தனது நடிப்பால் தனித்துவம் பெற்ற நடிகை சாய் பல்லவி, தற்போது தனது ரசிகர்கள் மத்தியில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளார். ‘அமரன்’ திரைப்பட வெற்றியை தொடர்ந்து, தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யாவுடன் நடித்துள்ள ‘தண்டேல்’ திரைப்படம்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிலையில், அவர் தனது முதல் ஹிந்தி திரைப்படமான ‘ஏக் தின்’ படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவிலும் சிறப்பாக அறிமுகமாகவிருக்கிறார்.


தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை தாண்டி, சாய் பல்லவி தற்போது ஹிந்தி திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். அவருடைய முதல் ஹிந்தி திரைப்படம் ‘ஏக் தின்’, நவீன காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தின் முக்கிய தனிச்சிறப்பு என்னவெனில், இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானின் மகன் ஜூனைத் கான் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.


இத்திரைப்படத்தை சுனில் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார். சாமான்யமான காதல் உணர்வுகளை, தற்போதைய தலைமுறையின் பார்வையில் சித்தரிக்கும் வகையில் இந்தக் கதை உருவாகியிருக்கிறது. படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் இடம்பெற்று வருகின்றன.படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவலின்படி, ‘ஏக் தின்’ திரைப்படம் 2025 நவம்பர் 7 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள திரையுலகங்களில் தனது இயற்கையான நடிப்பால் பலரையும் கவர்ந்தவர். ‘பிரேமம்’, ‘மாரி 2’ போன்ற படங்களில் அவர் காட்டிய நடிப்பு, அவரது தனித்துவத்தை வெளிப்படுத்தியது. தற்போது ஹிந்தி சினிமாவிலும் அவர் அதே பாதையை தொடர இருக்கிறார். ‘ஏக் தின்’ படத்தின் போஸ்டர்கள், காட்சி படம் மற்றும் ரசிகர்களிடம் வந்த எதிர்வினைகள் சாய்பல்லவியின் பாலிவுட் பயணம் நிச்சயமாக வெற்றிகரமாக அமையும் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement