• Jan 19 2025

90ஸ் கிட்ஸ்களின் நினைவுகளை திருப்பிய விஜய் - ரம்பா! இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகின்றார் விஜய். இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகவும் இவருடன் இணைந்து பிரபல முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து  வருவதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

சமீபத்தில் விஜய் - சினேகா கம்போவில் வெளியான சின்ன சின்ன கண்கள் பாடல் பலராலும் ரசிக்கப்பட்டது. இந்த பாடல் அண்மையில் உயிரிழந்த பவதாரணியின் குரலில் பாடவைக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து தற்போது கோட் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் யாவும் நிறைவு பெற்றதாகவும், டப்பிங் பணிகள் மேக்கிங் எடிட்டிங் என்பன 60% கடந்ததாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இன்னொரு பக்கம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழக சார்பில்  கல்வி பொதுத் தர பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேரில் சந்தித்து பரிசுகளையும் வழங்கி இருந்தார்.


இந்த நிலையில், தற்போது நடிகை ரம்பா குடும்பத்தை நேரில் சந்தித்து உள்ளார் நடிகர் விஜய். தற்போது இந்த சந்திப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜயும் ரம்பாவும் இணைந்து மின்சாரக் கண்ணா, சுக்ரன், என்றென்றும் காதல், நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் 90ஸ் கிட்ஸ்களின் நினைவுகளை திருப்பிக் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement