“பிக்பாஸ் தமிழ்” நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் புதிய சர்ச்சையோ, உணர்ச்சியோ இல்லாமல் போவதில்லை. தற்போது ஒளிபரப்பாகி வரும் புதிய சீசனிலும் அதே நிலைதான். போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கைக் கதைகளை பகிர்ந்து கொண்ட “Life Story” டாஸ்க் வீட்டுக்குள் உணர்ச்சியும், சிரிப்பும் கலந்த ஒரு சூழலை உருவாக்கியது.

ஆனால், அந்த டாஸ்க்குக்குப் பிறகு ஏற்பட்ட ஒரு கேள்வி தற்போது சமூக ஊடகங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்த சீசன் ஆரம்பத்தில் 20 போட்டியாளர்களுடன் உற்சாகமாக துவங்கியது. சில நாட்களில் மனநிலை பிரச்சனைகள் ஏற்பட்டதால் நந்தினி, தன்னால் வீட்டுக்குள் தங்க முடியாது என்று கூறி வெளியேறினார்.
பின் முதல் வாரத்தில் பிரவீன் காந்தி வாக்கு குறைவால் வெளியேற்றப்பட்டார். அதன்பின் அப்சரா மற்றும் ஆதிரை ஆகிய இருவரும் வெளியேறினர். இவ்வாறு சிலர் வெளியேறியதால், தற்போது வீடு சற்று குறைந்த போட்டியாளர்களுடன் இன்னும் சுறுசுறுப்பாக இயங்குகிறது.
சமீபத்திய எபிசொட்டில் ஒளிபரப்பான “வாழ்க்கைக் கதை” டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. ஒவ்வொருவரும் தாங்கள் எப்படி வளர்ந்தார்கள், வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், போராட்டங்கள், கனவுகள், தோல்விகள் மற்றும் வெற்றிகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசினர்.
பலரின் கதைகள் கேட்கும்போது வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்கள் கூட உணர்ச்சிவசப்பட்டனர். சிலர் அழுதனர், சிலர் தங்களது அனுபவத்தையும் பகிர்ந்தனர்.
ஆனால், அனைவரின் கதையும் ஒரே அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கவில்லை. சிலரது கதைகள் மற்ற போட்டியாளர்களுக்கு சற்று சலிப்பாகவும் தோன்றியுள்ளது.

பிக்பாஸ் இன்று வெளியிட்ட ப்ரொமோவில் கலையரசன் போட்டியாளர்களிடம் “நீங்க சொல்லுங்க… யாருடைய கதை சொல்லும்போது ரொம்ப boring-ஆ இருந்தது?” என்ற கேள்வியை எழுப்புகிறார்.
அந்த கேள்விக்குப் சுபிக்ஷா எந்த தயக்கமும் இன்றி, “ரொம்ப boring-ஆ இருந்தது Fj- திவாகர் சொன்ன கதை தான்.” என்றார். அதனைத் தொடர்ந்து விக்ரம், அரோரா, மற்றும் வியானா ஆகியோர் Fj மற்றும் திவாகரின் பெயரைச் சொல்கிறார்கள்.
 
                              
                             
                            _6904592b9b305.jpg) 
                             
                                                    _690456f9b76d3.jpg) 
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!