பெரும்பிடுகு முத்தரையர் கி.பி. 705 முதல் 745 வரை இவர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய நிலப்பரப்பை ஆண்ட பெருநில மன்னராவார்.நந்திவர்மனின் முடிசூட்டு விழாவில் இவர் கலந்து கொண்டது வரலாற்று சிறப்பாக கவனிக்கப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால், திருச்சி நகரில் இவரது சிலை நிறுவப்பட்டது.
பிறகு 2002 ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.நேற்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அரசியல் மற்றும் பொது நிறுவனங்களின் தலைவவர்கள் திருச்சிராப்பள்ளி ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்தது மரியாதைகள் செய்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களினால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.மேலும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன் இருவரும் முதலாவதாக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!