• Apr 03 2025

லியோ பட பாணியில் MS தோணியை 'BADASS' ஆக்கிய சி.எஸ்.கே அணி..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஐபிஎல் தொடருக்காக நேற்றைய தினம் சென்னை வந்தடைந்துள்ளார் எம்எஸ் தோணி. அவரை வரவேற்கும் விதமாக சிஎஸ்கே அணி வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாக உள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 22 ஆம் தேதி சென்னையில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியில் பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தங்களை தீவிரமாக ஆயத்தப்படுத்தி வருகிறார்கள்


இந்த நிலையில், சென்னை வந்து இறங்கிய தோணிக்கு நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் பாணியில் சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்கள் சிஎஸ்கே அணி. தற்போது குறித்த வீடியோ பெரும் வைரலாகி உள்ளது.


அதாவது, அம்பானி குடும்பத்தினரின் திருமண விழாவை முடித்த கையோடு சென்னை வந்தடைந்துள்ளார் தோணி.

கிரிக்கெட் சாம்பியனான தோணிக்கு, லியோ பட ஸ்டைலில் போட்டோ எடிட் செய்து, அவருக்கு பாடலையும் வெளியிட்டு அசத்தி உள்ளார்கள்.




Advertisement

Advertisement