• Sep 23 2026

திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு; என்கவுண்டரில் இருவர் பலி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தின் மூலம்  கதாநாயகியாக அறிமுகமானவர் திஷா பதானி.  இவருக்கு உத்திரப்பிரதேச  மாநிலம் பரேலியில் வீடொன்று உள்ளது.  கடந்த 12ஆம் தேதி அவருடைய வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடைபெற்றது.  இது இந்தியத் திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

இதைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை தீவிரமாகத் தேடி வந்தனர். மேலும் திஷா பதானியின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு,  துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும் அடையாளம் கண்டனர். 

அதன்பின் அவர்களை பிடிப்பதற்காக  மூன்று மாநில போலீசார் அடங்கிய சிறப்பு படை அமைக்கப்பட்டது. போலீசாரின் தீவிர தேடுதலில் குறித்த கும்பல் சுற்றிவளைக்கப்பட்டது.


அதில் அவர்கள் போலீசார் மீது தாக்குதலை நடத்தியதால் சிறப்பு படையினர் அந்த இரண்டு பேரையும் என்கவுண்டர் பண்ணி உள்ளனர். 

இவர்கள் இருவரும் திசா பதானி வீட்டில் துப்பாக்கி நடத்தியவர்கள் என பின்னர் தான் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற  இடத்தில் இருந்து இரண்டு துப்பாக்கிகளும் ஏராளமான தோட்டக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  உயிரிழந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement