• Jan 18 2025

சூப்பராக நடந்த ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா நிச்சயதார்த்தம்... இணையத்தில் வைரலாகும் அழகிய ஜோடி புகைப்படங்கள் இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறமையால் பிரபலமானவர் ரோபோ சங்கர். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்கி வரும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கும் அவரது முறை மாமனுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.


குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உச்சத்தை தொட்ட ரோபோ ஷங்கர் ஜெயம் ரவி நடித்த தீபாவளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் சிறுசிறு வேடங்களில் படங்கள் நடித்து வந்தவர் தனுஷுடன் மாரி படத்தில் அவருக்கு நண்பனாக படம் முழுவதும் வரும் வேடத்தில் நடித்தார். வாயை மூடி பேசவும், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது.


ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் அடுத்து விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகை இந்திரஜாவிற்கு முறைமாமாவுடன் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகிவிட்டன.


இந்த நிலையில் பெரியோர்கள் முன்னிலையில் சென்னையில் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நக்கீரன் கோபால், அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement