• Nov 22 2024

ரோபோ சங்கர் மாப்பிள்ளைக்கு கொடுத்த வரதட்சணை இவ்வளவு தானா? போட்டுடைத்த செய்யாறு பாலு

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பணி புரியும் ரோபோ ஷங்கர், கலக்க போவது யாரு என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். இவர், நகைச்சுவை பாத்திரங்களுக்காக மிகவும் பிரபலமானவர் .

இவர் தன்னுடையை தனித்துவமான காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தி, சிவாஜி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களின் குரல்களில் மிமிக்கிரி செய்து அசத்துவார்.

விஜய் டிவியில் இவருடைய காமெடிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிமுகமானார்.தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தி வந்தார்.


கடந்த ஆண்டு ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென்று உடல் எடை குறைந்து பெரிய அளவில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.  ஆனாலும் தனது செல்ல மகளின் திருமணத்திற்காக அதிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில், தமிழ் சினிமா பிரபலங்களே வியக்கும் வகையில் நடந்து முடிந்த இந்திரஜாவின் கல்யாணம் தொடர்பில் புதிய பகிரை கிளப்பியுள்ளார் செய்யாறு பாலு. அதன்படி அவர் கூறுகையில்,


இந்திரஜா சங்கருக்கும் கார்த்திக்கும் இடையே 15 வயது  வித்தியாசம் காணப்படுகிறது. ஆனால் அது எல்லாம் பெரிய விஷயம் இல்லை. கார்த்திக் சுமார் 27 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர் நல்ல குணமுடையவர். அவர்களை அழைத்து ராதிகா சரத்குமாரும் ராஜ விருந்து கொடுத்திருந்தார்.

ரோபோ சங்கர் அவர் மகளுக்கு அதிகளவு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்தார் என்று சொல்வதெல்லாம் அது அவருடைய குடும்ப விஷயம். ரோபோ சங்கரை விட அவரது மாப்பிள்ளை கார்த்தி அன்பு இல்லம் எனும் ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வருகிறார். ஆனாலும் அவருக்கு 15 லட்சத்திற்கு கார், பல சவரன் நகை எல்லாம் சங்கர் போட்டுள்ளார் என்றால் எல்லாமே அவரது ஒரே மகளுக்காக சேர்த்து வைத்தது தான்.


ரோபோ சங்கரும் அவரது மகள் இந்திரஜாவும் திருமண கொண்டாட்டங்களை வீடியோவாக வெளியிட்டு ஆட்டம் பாட்டம் என அலப்பறையை கிளப்பி வருகிறார்கள். அதை பார்த்து பொறாமை படக்கூடாது. அவர்கள் சமூகத்திற்கும் பல நன்மைகளை செய்துள்ளனர். அதனை பாராட்ட வேண்டும் என மேலும் கூறியுள்ளார் செய்யாறு பாலு .

Advertisement

Advertisement