• Sep 20 2024

மீண்டும் தொடரும் பாலியல் அத்துமீறல்.. கும்கி பட நடிகர் கைது..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ஸ்ரீஜித் கடந்த 2005ல் வெளியான மயூகம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இதையடுத்து அதே ஆண்டில் வெளியான சாந்துப்பொட்டு என்ற மிகப்பெரிய ஹிட் படத்திலும் இவர் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். மிஷன் 90 டேஸ், புன்யாலன் அகர்பத்தீஸ் அண்ட் புன்யாலன் பிரைவேட் லிமிடெட் போன்ற ஹிட் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல கேரக்டர்களில் நடித்துவந்த இவர் தமிழிலும் வேட்டை, கும்கி, மதயானைக்கூட்டம், கதகளி மற்றும் அசுரவதம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் கொடூரமான வில்லன் கேரக்டர்களில் இவர் சிறப்பான நடித்து பெயர் பெற்று வந்தார். தமிழில் இவர் ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் சிறப்பான பெயரை பெற்றுள்ளார்.

இவ்வாறு இருக்கையில் இவர் தற்போது இரண்டு மைனர் பெண்களிடம் பாலியல் அத்துமீறியதாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4ம் தேதி திரிச்சூரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஸ்ரீஜித் காரில் இருந்தநிலையில், அந்த வழியாக வந்த இரண்டு மைனர் பெண்களிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இது அவருக்கு புதிதானதல்ல. கடந்த 2016ல் இதேபோல ஒரு படத்தின் சூட்டிங்கின்போது, அந்த வழியாக வந்த 14 பள்ளி மாணவிகள் முன்பு அவர் இதேபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அத்தோடு அந்தப் பள்ளி மாணவிகளின் தலைமை ஆசிரியர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீனிலும் வெளிவந்தார். இதையடுத்து இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டதாகவும் போலீசார் இந்த வழக்கில் போதுமான ஆதாரத்தை சமர்ப்பிக்க தவறிவிட்டதாகவும் அந்த மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.இது தற்போது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement