• Sep 19 2024

ஜீவி 2 திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியிடு…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

வெற்றியின் நடிப்பில் உருவாகி வரும் ஜீவி 2 திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகி வருபவர் நடிகர் வெற்றி.

அந்த வகையில் அவர் நடித்த ‘ஜீவி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் ‘ஜீவி 2’ என்ற பெயரிலேயே உருவாகி வருகிறது.பேண்டஸி த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தை விஜே கோபிநாத் இயக்கி வருகிறார்.

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். இவர்களுடன் கருணாகரண், மை கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

யாரும் கேள்விப்படாத புதியதொரு கோணத்தில் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு இன்று தனது பகுதி டப்பிங்கை நடிகர் வெற்றி நிறைவு செய்தார். அதனால் படத்தின் ஒட்டுமொத்த டப்பிங் பணிகளும் நிறைவுபெற்றுள்ளது. மேலும் தயாரிப்பு பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளதால் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement