• Sep 07 2024

இரண்டு நாட்களில் கோடிகளை அள்ளிய ராயன்..! மொத்தம் எவ்வளவு தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் உலக அளவில் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு மிகப்பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில், ராயன் திரைப்படம் 100 கோடி வசூலை படைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருட்டுலயும் இரவிலேயுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்த எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.


இந்த நிலையில் ராயன் படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆன நிலையில், தற்போது இரண்டாவது நாளுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது.

அதன்படி ராயன் திரைப்படம் இரண்டு நாட்களில் 52.75 கோடிகளை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement