• Jun 28 2024

பிக் பாஸை தொடர்ந்து புதிய சீரியலில் களமிறங்கும் ரவீனா! முழு விபரம் இதோ..

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சின்னத் திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல்களில் கலக்கியவர் தான் நடிகை ரவீனா தாஹா. இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

இவர் நடித்த பூவை பூச்சூடவா, மௌன ராகம் 2 உள்ளிட்ட சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதில் அவருக்கான அங்கீகாரமும் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து அசத்தியிருந்தார். மேலும் சில படங்களிலும் நடித்திருந்தார்.

இவ்வாறு சீரியல்களை தாண்டி விஜய் டிவியில் நடைபெற்ற டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டினார். அதுமட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்.


இந்த நிலையில், நடிகை ரவீனா கமிட் ஆகியுள்ள புதிய சீரியல் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


அதாவது  ஆஹா தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் வேற மாதிரி ஆபீஸ் இரண்டாவது சீசனின் முக்கிய நாயகியாக நடிக்க உள்ளார் ரவீனா. இதை அறிந்த ரசிகர்கள் தற்போது அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement