• Dec 02 2024

’அனிமல் 2’ படத்தில் இருந்து ராஷ்மிகாவை தூக்க போறாங்களா? ஓவர் பந்தா உடம்புக்கு ஆகாது..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு வெளியான அனிமல் என்ற ஹிந்தி திரைப்படம் திரை உலகினர் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்றாலும் இந்த படம் வசூல் அளவில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. 100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 1000 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடப்பட்டது.

இந்த படத்தின் வெற்றி காரணமாக ஒரு பக்கம் ரன்பீர் கபூர் மற்றும் அனில் கபூருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் அதேபோல் ராஷ்மிகா மந்தனாவுக்கு பாலிவுட் திரை உலகில் ஏராளமான வாய்ப்புகள் வந்ததாகவும் செய்திகள் வெளியாகின

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கும் நிலையில் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட முதல் பாகத்தில் நடிக்கும் அனைவரும் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்திற்குஅனிமல் பார்க்என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.



இந்த நிலையில்அனிமல்படம் வெற்றி காரணமாக ஓவர் பந்தா செய்த ராஷ்மிகா மந்தனாஅனிமல் பார்க்படத்தில் நடிப்பதற்காக 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் அவரை படத்தில் இருந்து தூக்க முடிவு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால்அனிமல்படத்தின் இரண்டாம் பாகத்தில்  என்பது முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால் தன்னை படக்குழுவினர்களால் தூக்க முடியாது என்ற நம்பிக்கையில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும்  தமிழ் மற்றும் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அவரை அணுகினாலும் தான் ஹிந்தியில் பிஸியாக இருப்பதாகவும் இனிமேல் தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறுவதாகவும் கூறப்படுகிறது. இதே ரீதியில் சென்றால் கண்டிப்பாக ராஷ்மிகா மந்தனா திரையுலகில் இருந்து அகற்றப்படுவார் என்று அனுபவம் வாய்ந்த திரை உலக பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement