• Sep 20 2024

லியோ படத்திற்கு பின் ரேஞ்சே வேற லெவல்! ஹீரோக்களுக்கு நிகராக சம்பளத்தை உயர்த்திய அனிருத்!

sarmiya / 10 months ago

Advertisement

Listen News!

அனிருத் ஒவ்வொரு ஆண்டும் படங்களுக்கு இசை அமைத்து மற்ற இசையமைப்பாளர்களுக்கு எல்லாம் பயங்கர டாப் காெடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு பல பிரமாண்ட படங்களுக்கு இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். அதிலும் இவர் மியூசிக் போடும் படங்களின் பாடல்கள் எல்லாம் தாறுமாறாக இருக்கின்றது. 


இப்போது லியோ படத்திற்கு பின் அனிருத்தின் ரேஞ்சே வேற லெவலுக்கு போய்விட்டது. இவர் ஹீரோக்களுக்கு நிகராக தன்னுடைய சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்தியுள்ளார்.லியோ படத்தில் எட்டு கோடி சம்பளம் வாங்கிய அனிருத் அந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக கமிட் ஆகும் ஒவ்வொரு படத்திற்கும் 10கோடியை சம்பளமாக வாங்குகிறார். படத்தின் வெற்றிக்காக அனிருத் கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்கள் வாரி இறைக்கின்றார்கள்.


தளபதியின் லியோ படத்தை தொடர்ந்து தலைவர் 170 லைக்கா தயாரிக்கும் படத்திற்கு அனிருத்தான் இசையமைக்கின்றார். இதுமட்டுமல்ல அஜித்தின் விடாமுயாற்சி  , தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம், சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் படம் என அரை டஜன் படங்கள் தற்போது அனிருத் கைவசம் உள்ளது. 

Advertisement

Advertisement