• Apr 28 2024

லால் சலாம் ‘மொய்தீன் பாய்’ ஹாரக்டரின் மாஸ் கெட்டப்பில் ரஜினி - தீயாய் வைரலாகி வரும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இதோ!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் - நடிக்கிறார். இதில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினி சம்பந்தமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறார்.

லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் கதையின் நாயகர்களாக விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்றது. 

அடுத்தகட்டமாக ரஜினி நடிக்கும் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார் ஐஸ்வர்யா. ரஜினி நடிக்கும் மொய்தீன் பாய் செம்ம மாஸ் ஆக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கெட் அப்பில் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினி ஸ்டைலாக நடந்து செல்லும் அந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement