• May 15 2024

முடிவுக்கு வந்த ஜெயிலர் பட ஷுட்டிங்- பிரமாண்டமாக கேக் வெட்டிக் கொண்டாடிய பிரபலங்கள்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 11 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளியான 'அண்ணாத்த' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே சந்தித்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். அதேபோல், இப்படத்தில் தமன்னா, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரிப், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


இந்த படத்திற்கு நெல்சன் திலீப் குமாரின் ஆஸ்த்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருந்தது.


இப்படியான நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement