• Oct 01 2025

நல்லது செய்யவா அரசியலுக்கு வாறீங்க...விஜயை சரமாரியாக கேள்வியெழுப்பிய ராஜகுமாரன்.!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் நீண்ட நாட்களாகக் கலைஞராகவும், இயக்குநராகவும் செயல்பட்டு வரும் இயக்குநர் ராஜகுமாரன், அண்மையில் ஒரு முக்கிய அரசியல் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


அவர் நடிகர் தளபதி விஜய்யின் அரசியல் வருகை பற்றி தனது பார்வையை தெளிவாக பதிவு செய்துள்ளார். அவரது இந்த கருத்துகள் தற்போது அரசியல் மற்றும் திரை உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இயக்குநர் ராஜகுமாரன் அதன்போது, "விஜய் மக்களுக்கு நல்லது பண்ண தான் அரசியலுக்கு வரேன்னு சொன்னா அத நான் ஒத்துக்க மாட்டேன்..நல்லது செய்யனும்னா அதான் படத்துக்கு 200 கோடி வாங்குறீங்களே.. 


வருசத்துக்கு 2 படம் நடிச்சிட்டு 100 கோடியை உங்களுக்கு வைச்சுக்கிட்டு 300 கோடில மக்களுக்கு நல்லது பண்ணுங்களேன்.. சினிமாவில ஆண்ட மாதிரி அரசியலிலும் வந்து நாட்ட ஆளப் பார்க்கிறார். அது நல்லது இல்ல, அது நடக்க வாய்ப்பும் இல்ல..." என்று கூறியுள்ளார். 

இதன் மூலம் இயக்குநர் ராஜகுமாரன் விஜயின் அரசியல் நுழைவுக்கெதிரான மனநிலையுடன் இருக்கிறார் என்பதனை அறியமுடிகிறது. 

Advertisement

Advertisement